Also Watch
Read this
By: Manigandan Raja

கணவன் மனைவி மீது வழக்குப் பதிவு :
காரைக்கால் மாவட்டம் சமத்துவபுரம் பகுதியில் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் மர்மமான முறையில் இறப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஹோப் டைல் அனிமல் ஃபவுண்டேஷன் அமைப்பினர் அப்பகுதியில் இதுகுறித்து விசாரித்தபோது அங்குள்ள நபர் ஒருவர் கோழிகளை வளர்ப்பதற்காக நாய் பூனைகளுக்கு விஷம் வைத்து கொன்று இருப்பதாகவும்.
அந்த நபர் தொடர்ந்து நாய் பூனைகளை துன்புறுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து ஹோப் டைல் அனிமல் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் சிரில் இருதயராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் நகர காவல் நிலைய ஆய்வாளருக்கு புகார் அளித்ததை தொடர்ந்து காரைக்கால் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த பஷீர் மற்றும் அவரது
மனைவி பர்வீன் ஆகியோர் மீது நகர காவல் நிலையத்தில்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இறந்த பூனைகளுக்கு காரைக்கால் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் உடல்கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிரில் இருதயராஜ் "விலங்குகளுக்கு உணவளிக்க முடியாவிட்டால் விட்டு விடுங்கள் மாறாக அதனை துன்புறுத்தாதீர்கள் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved