நாகையில் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்களிடம் கோவில் குருக்கள் தாமரை மலர வேண்டும் என பாஜகவிற்கு பிரச்சாரம் செய்த வீடியோ சர்ச்சையை கிளப்பியது. பெங்களூரில் இருந்து வந்த ஆன்மீக குழுவிடம் அக்கோவிலின் சிவகுருக்கள் கோவில் வரலாற்றை விளக்கியுள்ளார். அப்போதும் அம்மன் கையில் உள்ள தாமரை போல் அனைவரது உள்ளத்திலும் தாமரை மலர வேண்டும் என பாஜகவிற்கு ஆதரவாக பேசியது சர்ச்சையாகியது.