போர் போடுவதை தடுத்து நிறுத்திய தனிநபர் : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஈசாந்தை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும்.தற்போது அந்த போர் பழுதடைந்ததால் இரண்டு வருடங்களாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த.குடிநீர் கை பம்பை அகற்றிவிட்டு, மேலும் ஆழப்படுத்தி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க, போர் வாகனத்தை வரவழைத்து அதற்குண்டான பணியை செய்ய முயற்சி செய்தபோது, தனிநபர் ஒருவர் இது தனக்கு சொந்தமான இடம் இங்கே போர் போடக்கூடாது என கூறியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் தனிநபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் போலீஸ் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்களிடம் போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தியும் அங்கிருந்து கலைந்து செல்ல பொதுமக்கள் மறுத்துவிட்டனர். பின்னர் அங்கிருந்து போர் வாகனம் அந்த வழியே புறப்பட்டு சென்றதால் வேற வழி இன்றி போலீஸ் வாகனத்தை பெண்கள் விடுவித்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பிரச்சனையை சரி செய்யும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். போர் போடுவது பிரச்சனையின் காரணமாக அங்கே வந்த போலீஸ் வாகனத்தை சிறைபிடித்த பெண்களால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. Related Link தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்த முதலமைச்சர்