திருமணமாகி, எட்டே மாதங்களில் கட்டிய மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அரசு ஊழியர். கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசிவிட்டு அழுது ஆக்டிங் செய்த கல்நெஞ்ச கணவன். அடுத்த சிலமணி நேரத்திலேயே அம்பலமான கணவனின் கபட நாடகம். மனைவியை கணவன் கொலை செய்தது ஏன்? கணவனின் வேஷம் வெளிவந்தது எப்படி?வழக்கம்போல் சர்ச்சுக்கு சென்றுவிட்டு வந்த இளம்பெண்ஞாயிற்றுக்கிழமைன்னாலே இளம்பெண் தேவாலயத்துக்கு போறது வழக்கம். அந்தவகையில, காலையில சர்ச்சுக்கு கிளம்பிபோன இளம்பெண் நண்பகல் 12 மணி வரைக்கும் அங்க இருந்துட்டு வீட்டுக்கு கிளம்பி போய்ருக்காங்க. அதுக்குப்பிறகு, மதியம் 3 மணி இருக்கும் இளம்பெண் சடலமா ஒரு கிணத்துல மிதந்துருக்காங்க. அதப்பாத்த, ஊர் மக்கள் உடனே போலீசுக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் குடுத்துருக்காங்க. அதேமாதிரி, அந்த இளம்பெண்ணோட கணவருக்கும் போன் பண்ணி தகவல் சொல்லிருக்காங்க. அப்போ, கடைக்கு போய்ருந்த கணவர், வேகவேகமா அங்க வந்ததோட தினமும் வயிறு வலிக்குது சொன்னாளே, அதுக்காக தற்கொலை பண்ணிப்பானு நினைக்கலயேன்னு, கத்திக்கதறி அழுதுருக்காரு. அதபாத்த ஊர் மக்கள், அவருக்கு ஆறுதல் சொல்லிருக்காங்க. இதுக்குஇடையில சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்டத்துக்காக அனுப்பி வச்சிட்டு இளம்பெண்ணோட உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், தோழிகள்னு எல்லார்கிட்டயும் சாதாரண விசாரணை நடத்திருக்காங்க. மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பெண்ணின் சகோதரர் புகார்அந்தநேரம், தகவல் தெரிஞ்சி அங்க வந்த பொண்ணோட சகோதரர் என் தங்கச்சி இறப்புல சந்தேகம் இருக்குறதாகவும், தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு அவ கோழை இல்லனும் சொல்லி போலீஸ்ல புகார் குடுத்துருக்காரு. அதுக்குப்பிறகு, வழக்குப்பதிவு பண்ண போலீசார் மாமனார், மாமியார், கணவர்கிட்ட விசாரிச்சிருக்காங்க. அப்போ, 3 பேருமே முன்னுக்குப்பின் முரணா பதில் சொல்லிருக்காங்க. அதுலயும், அழுது உருண்ட இளம்பெண்ணோட கணவர், போலீசார் கேட்ட கேள்விக்கெல்லாம் சம்மந்தமில்லாத பதில்களாவே சொல்லிருக்காரு. அதனால, அவர்மேல போலீசாருக்கு சந்தேகம் வலுத்துருக்குது. அடுத்து, தங்களோட பாணியில கிடுக்குப்பிடி விசாரணை நடத்திருக்காங்க காவலர்கள். அப்பதான், இளம்பெண் தற்கொலை பண்ணிக்கல, கொலை செய்யப்பட்டு கிணத்துல வீசப்பட்ருக்காங்க அப்டிங்குறதே தெரியவந்துச்சு.கூடுதலாக 10 சவரன் நகைகள் கேட்டு கணவர் வீட்டார் டார்ச்சர்நெல்லை, மானூர் பக்கத்துல உள்ள குப்பனாபுரத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரோட 25 வயசு மகன் அந்தோணி ராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில வேலை பாத்துட்டு இருக்காரு. இவருக்கும், மேல இலந்தைகுளத்தை சேர்ந்த மோசேங்குறவதோட 23 வயசு மகள் பாக்கியத்தாய்க்கும் கடந்த எட்டு மாசத்துக்கு முன்னால கல்யாணமாகிருக்குது. அப்போ, மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண் வீட்டுல இருந்து 10 சவரன் நகை, பீரோ, கட்டில்னு சீர்வரிசை பொருட்கள் குடுத்துருக்காங்க. கல்யாணமாகி சில வாரங்கள் எந்த பிரச்சனையும் இல்லாம வாழ்க்கை போயிருக்குது. ஆனா, அதை சிதைக்குறமாதிரி கணவர் வீட்டார் அடுத்து டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. மாப்பிள்ளை அரசு வேலை பாக்குறான், அவனுக்கு 10 சவரன் நகை கொடுத்தா போதாது, அதனால இன்னும் 10 சவரன் நகை வாங்கிட்டு வரணும்னு மாமனாரும் மாமியாரும் பாக்கியத்தாய்க்கு அழுத்தம் குடுத்துருக்காங்க. அதனால, வருத்தப்பட்ட மனைவி தன் கணவர்கிட்ட சொல்லி அழுதுருக்காங்க. அரசு வேலை என்பதால் கூடுதல் வரதட்சணை கேட்டு டார்ச்சர்அப்போ, ஆறுதல் சொல்ல வேண்டிய கணவன், எங்க அம்மா-அப்பா சரியாதான் கேக்குறாங்க, பிரைவேட் கம்பெனியில வேலை பாக்குற மாப்பிள்ளைக்கே நகையும், சீர்வரிசை பொருட்களும் அதிகமா குடுக்குறாங்க, அதனால 10 சவரன் வாங்கிட்டு வான்னு மனைவிகிட்ட கேட்ருக்காரு கணவன் அந்தோணி. அப்படி இல்லையா 10 லட்சம் ரொக்கம் வாங்கிட்டு வான்னு சொல்லிருக்காரு. எங்க வீட்ல ஏற்கெனவே கஷ்டப்படுறாங்க, நகை பணமெல்லாம் கொடுக்க முடியாது, கடன் வாங்கி குடுக்குற நிலையிலயும் அவங்க இல்லனு சொல்லிருக்காங்க பாக்கியத்தாய். அதுக்கு, நகை-பணம் வாங்கிட்டு வரலனா சேர்ந்து வாழ முடியாதுனு மாமனார், மாமியார், கணவர் 3 பேரும் சேர்ந்து தினம்தினம் கொடுமைப்படுத்திருக்காங்க. ஆனா, தன்னோட வீட்ல உள்ளவங்களுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்கனு எதையுமே பெற்றோர்கிட்ட சொல்லவே இல்ல பாக்கியத்தாய். இதுக்குமத்தியிலதான், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல சர்ச்சுக்கு போயிட்டு வீட்டுக்கு கிளம்பிருக்காங்க இளம்பெண்.நாடகமாடிய கல்நெஞ்சக் கணவனை கைது செய்த போலீசார்வர்ற வழியிலேயே மனைவிய வழிமறிச்ச அந்தோணி, நகை அல்லது பணம் வாங்கிட்டு வான்னு சொல்லி பல நாள் ஆச்சு, ஆனா எதையுமே கண்டுக்காம வீட்ல சமைக்கிறது, சாப்பிடுறது, சர்ச்சுக்கு போறதுனு இருந்தா என்ன அர்த்தம்னு கேட்டு அடிச்சி கீழே தள்ளி கழுத்த நெரிச்சிருக்காரு. அதுல பாக்யலட்மியோட உசுரு அடங்கிருச்சு. மனைவியோட உயிர்போகும்னு எதிர்பார்க்காத அந்தோணி, சத்தங்காட்டாம சடலத்த ஊர்ல உள்ள ஒரு கிணத்துல வீசிட்டு போய்ட்டாரு. கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஊருக்குள்ள வரவே இல்ல அந்தோணி. இதுக்கு இடையிலதான் கிணத்துல சடலம் மிதந்துருக்கு. அடுத்து, எதுவுமே தெரியாதமாதிரி அரக்க பறக்க கிணத்து பக்கம் வந்து அழுது நாடகம் ஆடிருக்காரு அரசு ஊழியர் அந்தோணி. ஆனா, என் தங்கச்சி இறப்புல மர்மம் இருக்குறதா பாக்கியத்தாயோட அண்ணன் புகார் குடுக்க, அடுத்து போலீசார் நடத்துன கிடுக்குப்பிடி விசாரணையில கணவரோட கபட நாடகம் அம்பலமாகிருச்சு. Related Link என்கவுன்டரில் ரவுடி உயிரிழப்பு