news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்த மதுப்பிரியர்
tv

Also Watch

tv

Read this

வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்த மதுப்பிரியர்

கோவிலம்பாக்கம், சென்னை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மதுப்பிரியர்

வேதனை தெரிவித்த மதுப்பிரியர் : 

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை எண் 4051-ல் மதுப்பிரியரிடம் அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த டாஸ்மாக் கடையில் 140 மதிப்புள்ள மது பாட்டிலை, விற்பனையாளர் 160க்கு விற்று வந்துள்ளார். அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 20 ரூபக் வசூலிப்பதை வாடிக்கையாக தொடர்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று டாஸ்மாக் கடை திறந்த பிறகு மதுப்பிரியர் ஒருவர் வாங்கிய மாதுப்பாட்டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாக வசூலித்துள்ளார் கடை ஊழியர். இதுகுறித்து மதுப்பிரியர் கேள்வி எழுப்பியும் 20 ரூபாயை திருப்பி தராமல் கூடுதல் விலைக்கு மாதுப்பாட்டில்களை விற்பனை செய்துள்ளார் டாஸ்மாக் ஊழியர்.

இவ்வளவு நாளா வாங்கினீங்கதானே... இப்ப என்ன புதுசா கேள்வி கேட்குற ? போயா என டாஸ்மாக் ஊழியர் அலட்சியமாக பதில் அளித்த காட்சியை மதுப்பிரியர் அவரது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாய் பரவி வருகிறது.

டாஸ்மாக் கடைகளில் நடக்கும் இந்த "கூடுதல் விலை" வசூலும், ஊழியர்களின் அராஜகப் போக்கும் மாறவில்லை என மதுப்பிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மதுப்பிரியரை ஒருமையில் பேசி, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
200 ரூபாய் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட முயற்சி

200 ரூபாய் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட முயற்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனமழையால் சாலையின் நடுவே விழுந்த மரம்

1
20 mins agoshare
சாலையின் நடுவே விழுந்த மரம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved