தஞ்சாவூர் மாவட்டம் திருகாட்டுப்பள்ளியில் மழைபொழிவு மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி ஆடிபூர கஞ்சி கலய பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக நடைபெற்ற இந்த விழாவில் பக்தர்கள் அக்கினேஸ்வர ஆலயத்திலிருந்து முளைப்பாரி, தீச்சட்டி, கஞ்சி கலயம் எடுத்து நான்கு வீதிகள் வழியாக வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.