நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே அதிவேகமாக சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் பல்டியடித்து கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சத்தம் கேட்டு ஓடி சென்ற மக்கள், காருக்குள் சிக்கியிருந்த இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.