சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 60 கிலோ உட்பட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் அகற்றினர். சென்னை கோயம்பேடு காய்கறி மற்றும் பழச்சந்தை பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது, 60 கிலோவுக்கு மேலான பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர்.