Also Watch
Read this
Posted on: Mar 26, 2026 02:42 PM
By: Manigandan Raja

கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து :
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு லாக்கர் பெட்டிகளை கொண்டு செல்லும் மாருதி ஈகோ வாகனம் புதன்கிழமை மாலை நாகர்கோவில் பகுதியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது மாருதி ஈகோ வாகனத்தை டிரைவர் அனில் என்பவர் ஓட்டி சென்ற நிலையில் அழகியமண்டபம் பகுதியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்து.
வலது புறமாக சென்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தை மோதி தள்ளி விட்டு சாலையோர ஹோட்டல் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில்.
இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த லின் என்பவரை பொதுமக்கள் மீட்டு சிகிட்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் விபத்து குறித்து தக்கலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் விபத்து தொடர்பான பத பதைக்கும் சிசிடிவி காட்சி பதிவுகளும் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved