news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 101 வயது முதியவரின் தபால் வாக்கு முறைகேடாக பதிவு
tv

Also Watch

tv

Read this

101 வயது முதியவரின் தபால் வாக்கு முறைகேடாக பதிவு

திருப்பத்தூர், கதவாளம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Postol vote

தபால் வாக்கு முறைகேடாக பதிவு :

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் தற்போது நடக்க உள்ள 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தபால் வாக்குகள் அதிகாரிகள் இன்று முதல் பெறப்பட்டு வரும் நிலையில் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கதவாளம் பகுதியில் (பூத் என் : 51ல்) தொடர்ந்து தபால் வாக்கு செலுத்தி வருபவர்.

101 வயதான சாமா மந்திரி மகன் சின்ராஜ் இவரிடம் தேர்தல் மண்டல அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் உதவியாளர் முகமத் ஆகியோர் சாமா மந்திரி சின்ராஜிடம் தபால் வாக்கினை பெறாமல் அதே பகுதியை
சேர்ந்த ராமலிங்கம் மகன் சின்ராஜ்(75) என்பவரிடம் முறைகேடாக தபால் வாக்கிற்கு கையொப்பம் பெறப்பட்டதாகவும்.

சம்பந்தப்பட்ட ராமலிங்கம் மகன் சின்ராஜ் என்பவரிடம் ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் செல்போன் மூலம் அதிகாரிகள் வருவார்கள் நம்ம சின்னத்திற்கு பார்த்து செய்யுங்கள் என
கூறியதாகவும் அதற்கு உடந்தையாக அதிகாரிகள் தபால் வாக்கு பெரும்போது மற்ற கட்சி பிரமுகர்கள் யாரையும் அழைக்காமல்.

திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் இரண்டு பேர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட திமுக பிரமுகர்களுடன் அதிகாரிகள் சென்று தபால் வாக்கினை திமுகவிற்கு ஆதரவாக அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்.

அந்த வீடியோவில் நாங்கள் செய்தது தவறு அதை மாற்றிக் கொள்ளலாம் என அதிகாரிகளே ஒப்புக் கொள்ளும் காட்சிகள் வைரலாகி வருகிறது.மேலும் ஏற்கனவே அணைகட்டு பகுதியில் தபால் வாக்கிளை முறைகேடு செய்த இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில்.

இதுபோல பல பகுதிகளில் அதிகாரிகள் திமுக பிரமுகர்களோடு சேர்ந்து தபால் வாக்குகள் முறைகேடு செய்து வருவதாக பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தேர்தல் நடத்தும் மாவட்ட அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Link
20 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி நீக்கம்  எதிர்ப்பு தெரிவித்து சக ஊழியர்கள் போராட்டம்

20 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி நீக்கம் எதிர்ப்பு தெரிவித்து சக ஊழியர்கள் போராட்டம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
3 hrs 21 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved