காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வரும் நிலையில் 50 படகுகளில் கடலுக்கு சென்றவர்கள் கரை திரும்பாததால் காரைக்கால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து 50 படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புயலுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், 11 இழுவை படகுகளில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மட்டுமே திரும்பியுள்ளனர். மற்றவர்கள் கரை திரும்பாததால் கலக்கத்தில் இருக்கும் மீனவர்கள், கரை திரும்பாதவர்களை பத்திரமாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.