கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 30 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை குவித்து வைத்துள்ளனர். இந்த சூழலில், மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.