காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே 10 வயது சிறுவன் மீது மின்னல் தாக்கும் பதைபதைக்க வைக்கும் CCTV காட்சி வெளியாகியுள்ளது. மானாம்பதி கண்டிகை பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ்-அஞ்சலி தம்பதியின் 10 வயது மகன் டேனியல், வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, திடீரென மின்னல் தாக்கியதில், அந்த இடத்திலேயே சிறுவன் சுருண்டு விழுந்து உயிரிழந்தான்.மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவனின் உடலை கண்டு அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.