ஈரோடு மாவட்டம் பவானியில் தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பாத 10-ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேரை தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார் மாணவிகளை திருச்சி சமயபுரம் பகுதியில் பத்திரமாக மீட்டனர். விசாரணையில், வீட்டில் பெற்றோர் செல்போன் பார்க்க அனுமதிக்காததாலும், திட்டிக் கொண்டே இருப்பதாலும் வெளியூருக்கு சென்றுவிடலாம் என நினைத்து தேர்வு முடிந்தவுடன் சென்றுவிட்டதாக மாணவிகள் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.