திருப்போரூர் அருகே ஓ.எம்.ஆர் சாலை ஒட்டி உள்ள மதுபான பார் காலையில் 6 மணிக்கே திறக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கபடுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டுசெங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் ஓ எம் ஆர் சாலை ஒட்டி அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.அருகில் பாரும் செயல்பட்டு வருகிறது.மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.அதே நேரத்தில் பார்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.ஆனால் இங்கு செயல்பட்டு வரும் பாரில் தினமும் காலை 6 மணிக்கே திறக்கப்ட்டு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த நிலையில் இன்று காலை பார் திறக்கப்பட்டு மது பிரியர்கள் கூடுதல் விலைக்கு கள்ளத்தனமாக மது பானம் வாங்கி குடிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.இதனை காவல்துறை கண்டும் காணாமல் செயல்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.