கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான தொடரும் திரைப்படம், 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த நிலையில், அப்படத்தின் நடிகர் மோகன்லால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'சில பயணங்களுக்கு கூச்சல் தேவைப்படுவதில்லை என்றும், அவற்றை முன்னோக்கி கொண்டு செல்ல நல்ல இதயங்கள் மட்டுமே தேவை என்றும் கூறியுள்ளார். மேலும், கேரளாவின் அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் முறியடிக்க வைத்துள்ள அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.