‘பராசக்தி’ படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் அதர்வா துவங்கி இருக்கிறார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் பராசக்தி திரைப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் இந்தி திணிப்பை மையமாக கொண்டு தயாராகும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.