மிதுனம் தமிழ் புத்தாண்டு பலன்கள் இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு குறிப்பாக பத்தாம் வீட்டில் சனி வரும் மே 18 முதல் மூன்றில் கேது, ஒன்பதில் ராகு என்ற கிரகங்கள் சஞ்சாரம் செய்கிறார்கள்.அது மட்டும் இல்லாமல் மே 14ம் தேதி முதல் குருபகவான் ஜென்மராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செய்யல்பட்டால் ஏற்றம் மிகுந்த பலன்களை அடையலாம். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள்.கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த வீண் விரையங்கள் குறைந்து ஏற்றம் மிகுந்த பலன்கள் ஏற்படும். புத்தரவழியில் ஒரு மகிழ்ச்சி தரக்குடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். கணவன் மனைவி இடையே ஓற்றுமையானது மிகவும் சிறப்பாக இருக்கும்.ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படக்குடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித் திறமையால் அடைய வேண்டிய இலக்கை அடையக் கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தற்போது நீங்கள் சற்று கவனத்தோடு செயல்பட்டால் ஒரு நல்ல லாபத்தை ஈட்ட கூடிய ஒரு அதிஷ்டம் உங்களுக்கு உண்டு. வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் இக்கட்டான நேரத்தில் கூட்டாளிகள் ஆதரவால் அடைய வேண்டிய லாபத்தை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு.வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப் பலு சற்று கூடுதலாக இருந்தாலும் அதன் மூலமாக ஒரு சில ஆதாயத்தை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டில் உங்களுக்கு உண்டு.உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் கேதுபகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எந்த ஒரு காரியத்திலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகுளமான பலன்களை அடையக் கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு வரும் நாட்களில் உண்டு . 18-10-2025 முதல் 5-12-2025 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு தனஸ்தானமான இரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்யல் உள்ள காலத்தில் குடும்பத்தில் மேலும் மகிழ்ச்சி தரக்குடிய ஒரு இனிய நிகழ்வுகள் நடக்கக்கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.இந்த 2025-2026 தமிழ் புத்தாண்டில் நீங்கள் சற்று பொறுமையோடு இருப்பது, உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது, கூட்டாளி உடன் இணைந்து செயல்படுவதன் மூலமாக ஒரு வளமான பலன்களை அடையக் கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் அடைவதற்கு தட்சிண மூர்த்தி வழிபாடு மேற்கொள்வது சர்பேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வதால் ஏற்றம் மிகுந்த பலன்கள் ஏற்படும்.