தாய்லாந்து, கம்போடியா எல்லை பிரச்னையில், தற்போதைய நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இரு நாடுகள் இடையே, நீண்ட காலமாக இருந்து வந்த எல்லை பிரச்னை இரு தினங்களுக்கு முன்பு மோதலாக வெடித்ததை அடுத்து இரு நாடுகளும் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் தாய்லாந்தில் ஒரு ராணுவ வீரர் உள்ளிட்ட 15 பேரும், கம்போடியாவில் ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தனர்.இதையும் படியுங்கள் :கடந்த 10 ஆண்டுகளில் 80க்கும் மேற்பட்ட தேர்வு வினாத்தாள் மோசடி..!