news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews காசு கொண்டு போனா கரெக்டா கொண்டு போங்க...
tv

Also Watch

tv

Read this

காசு கொண்டு போனா கரெக்டா கொண்டு போங்க...

மதுரை

19

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mdu 3(9)

மேலூரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.40 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த நிலையில் கோட்டாட்சியர் சங்கீதா, விசாரணை மேற்கொண்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தினார்.

தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கை
மேலூர் பகுதியில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலூர் செக்போஸ்ட் பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ரவிவர்மா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

பெண்களிடம் ரூ.2.40 லட்சம் பறிமுதல்
அப்போது அவ்வழியாக வந்த வாடகை காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.சோதனையின் போது காரில் இருந்த பெண்கள் எடுத்துச் சென்ற பணத்தை அதிகாரிகள் பரிசோதித்ததில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.500 நோட்டு கட்டுகளாக மொத்தம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பணம் குறித்து தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குமாரி மற்றும் அவரது இரண்டு பெண் நண்பர்கள் காரைக்குடியில் உள்ள நகைக்கடையில் கடந்த பிப்ரவரி மாதம் நகை செய்வதற்காக ஆர்டர் வழங்கியிருந்ததாகவும், தற்போது அந்த நகையை வாங்குவதற்காக பணத்தை எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர்.


ரூ.2.40 லட்சம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைப்பு
ஆனால், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவர்கள் அளிக்காததால், தேர்தல் விதிமுறைகளின்படி ரூ.2.40 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர், மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குமாரி உள்ளிட்டவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ச் தேர்தல் பறக்கும் படையினருக்கு அவர் அறிவுறுத்தினார். மேலூர் பகுதியில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி அதிகளவு பணம் எடுத்துச் செல்லும் நபர்களிடம் தொடர்ந்து சோதனை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Link
மதமென பிரிந்தது போதும்..
இதுதாங்க உண்மையான இஃப்தார்

மதமென பிரிந்தது போதும்.. இதுதாங்க உண்மையான இஃப்தார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

0
4 hrs 16 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved