கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற 80க்கும் மேற்பட்ட தேர்வுகளின் வினாத்தாளில் நடந்துள்ள மோசடியால், 85 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மோசடிகளை தடுக்க அரசு தவறிவிட்டது என்றும், இளைஞர்களின் கனவுகளுக்கு செய்யப்படும் இந்த துரோகம் நிறுத்தபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசு தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் சீர்திருத்தம் என்பது வெற்று வாக்குறுதிகள் என நிரூபணம் ஆகியுள்ளதாக கூறினார்.