Also Watch
Read this
By: Web Team

வர்த்தக உடன்படிக்கை என்ற பெயரில் மரபணு மாற்ற விளை பொருட்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தால், இந்தியாவில் விவசாயம் பாதிக்கப்படும் என்பதுடன் ஐரோப்பாவுக்கான இந்திய வேளாண் ஏற்றுமதியும் பாதிக்கப்படும் என GTRI எனப்படும் Global Trade Research Initiative எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட சோயாபீன், கால்நடை தீவனத்திற்காக இராசயன கலப்பு சேர்த்த காயவைக்கப்பட்ட தானியங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதால் இந்திய விவசாயிகளின் முக்கிய நம்பிக்கையாக இருக்கும் ஏற்றுமதி பாழ்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் அல்லது கால்நடை தீவனங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வேளாண் பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வாங்காது எனவும் இந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved