அமெரிக்காவின் நியூயார்க் அருகே சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்ற ஹெலிகாப்டர் Hudson நதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். உலக அளவில் பிரபலமான Siemens தொழில்நுட்ப நிறுவனத்தின் ஸ்பெயின் நாட்டிற்கான சி.இ.ஓ Escobar, தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன், சுற்றுலா ஹெலிகாப்டரில் நியூயார்க் நகரை சுற்றிப்பார்க்க சென்றார். அமெரிக்க நேரப்படி மாலை 3 மணிக்கு பறக்க துவங்கிய ஹெலிகாப்டர், 15 நிமிடம் வானில் பறந்த பின் Lower Manhattan அருகே Hudson நதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. பின்னர் நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த ஆறு பேருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.