Also Watch
Read this
Posted on: Mar 26, 2026 11:30 AM
By: Manigandan Raja

எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை :
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன் மொழிவை பரிசீலித்து வருவதாக கூறிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஆனால் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.
அந்நாட்டு அரசு ஊடகத்தில் பேசியவர், அமெரிக்கா, இடைத்தரகர்கள் மூலம் செய்திகளை அனுப்பி வருவதை ஒரு முறையான பேச்சுவார்த்தையாகக் கருதவில்லை என்றும், இதில் அண்டை நாடுகள் அமெரிக்காவிடமிருந்து தங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
அதிபர் டிரம்ப் முன்மொழிந்த 15 அம்ச திட்டத்தை நிராகரித்த ஈரான், தாக்குதல்களை நிறுத்துதல், போர் உத்தரவாதங்கள், இழப்பீடு மற்றும் ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு உள்ளிட்ட நிபந்தனைகளில் உறுதியாக உள்ளது மேலும் பதற்றங்களை அதிகரித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved