ஈரான் மீது மிகப்பெரிய பதுங்கு குழி குண்டுகளை வீசிய B-2 குண்டு வீச்சு விமானங்கள் அமெரிக்கா திரும்பின. இஸ்ரேல்- ஈரான் மீதான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் என்று பெயரிடப்பட்ட இந்த பணியில், 7 B-2 விமானங்களும் 125 க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்களும் ஈடுபட்டன. ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது துல்லியமான தாக்குதலை நடத்திய இந்த B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள், மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்திற்கு பாதுகாப்பாகத் திரும்பிய நிலையில், அதிபர் டிரம்ப் ராணுவ வீரர்களை வெகுவாக பாராட்டினார்.