Also Watch
Read this
By: Web Team

உக்ரைனின் மிகப்பெரிய கடற்படை கப்பல், ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூழ்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் தாக்குதல் மூலம், பத்தாண்டிற்கும் மேலாக இயக்கப்பட்ட உக்ரைனின் மிகப்பெரிய கடற்படை கப்பலான சிம்ஃபெர்போல் மூழ்கடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
உக்ரைனின் டானூப் நதியின் டெல்டா பகுதியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும், ரஷ்ய கடற்படை ட்ரோன்களின் முதல் வெற்றிகரமான தாக்குதல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பணியாளர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved