இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு உதவுமாறு அமெரிக்கா ராணுவத்திற்கு அறிவுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.