பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் போதைக் கும்பலுக்கு எதிராக போலீசார் நடத்திய தாக்குதல்களில் 60 பேர் கொல்லப்பட்டனர். மிகவும் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் குழுக்களில் ஒன்றாக கருதப்படும் ரெட் கமாண்டை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில், காம்ப்ளெக்ஸோ டோ அலெமோ மற்றும் பென்ஹாவின் சுற்றுவட்டார பகுதிகளில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. 81 பேர் கைது செய்யப்பட்டு, 75 துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தாக்குதல் நடவடிக்கையில் சுமார் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.