அமெரிக்க அதிபர் டிரம்ப் தென் கொரியாவிற்கு வருவதற்கு சற்று முன், வடகொரியா குரூஸ் ஏவுகணையை ஏவி சோதனை செய்தததாக அந்நாட்டு அரசு ஊடகமான KNCA தெரிவித்துள்ளது. உச்சி மாநாடுகள் மற்றும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தில் கலந்து கொள்ள ட்ரம்ப் இன்று தென்காரியாவின் கியோங்ஜுவுக்கு வர உள்ளார். இந்த வார இறுதியில் சீன அதிபர் ஜின்பிங்குடனும் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கொரிய தீபகற்பத்தின் மேற்கு கடல் பகுதியில் இருந்து குரூஸ் ஏவுகணைகள் செங்குத்தாக ஏவப்பட்டு, தீர்மானிக்கப்பட்ட பாதையில் சுமார் 7,800 விநாடிகள் பறந்ததாகவும், இந்நிகழ்வில் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவில்லை என்றும் KNCA தெரிவித்துள்ளது.