Also Watch
Read this
Posted on: May 21, 2025 02:55 PM
By: Srini Vasan

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக அமெரிக்கா உடனான ஒப்பந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் எட்டாத நிலையில், தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது.
இதற்கிடையே, யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைகளை அதிகப்படியானது மற்றும் மூர்க்கத்தனமானது என்றும், இனி பேச்சுவார்த்தைகள் பலனளிக்க வாய்ப்பில்லை என்றும் ஈரான் அரசு தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved