Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரான் - இஸ்ரேல் போர் நிற்கும் :
பிரதமர் மோடி நினைத்தால் ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் நின்றுவிடும் என இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் ஹுசைன் ஹசன் மிர்சா கூறியுள்ளார். ஈரான் - இஸ்ரேல் மோதலில் பங்கேற்க அமீரகத்திற்கு விருப்பமில்லை எனவும், தங்களது நிலப்பரப்பை ஒருபோதும் யாரும் தாக்குதலுக்கான தளமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
மேலும், வளைகுடா நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி மிகுந்த மதிப்பை பெற்றுள்ளதாகவும், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் அவர் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும், இரு நாடுகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு செய்தால் போதும், போரை முடிவுக்குக் கொண்டு வர முடியும் எனவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved