ஈரான் தாக்குதல் : ஈரான்சுப்ரீம் தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான், இரண்டாவது நாளாக துபாய், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது தாக்குதலை தொடர்ந்தது. நேற்று பாம் ஜுமேரா ((Palm Jumeirah))பகுதியில் பலத்த குண்டுவெடிப்பு சத்தம் கேட்டு, தீ விபத்து ஏற்பட்டது. புர்ஜ் அல் அரப் பகுதியில் ட்ரோன் சிதைவுகள் விழுந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையும் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் தொடர்ந்தது. துபாய் மற்றும் தோஹாவில் நடத்தப்பட்ட ஏவுகனை தாக்குதலை பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததால் உரத்த வெடிச்சத்தங்கள் கேட்டது. வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது Related Link மத்திய கிழக்கு நாடுகளுக்கான 444 விமான சேவைகள் ரத்து