news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews மத்திய வாஷிங்டன் பகுதியில் பலத்த பாதுகாப்பு
tv

Also Watch

tv

Read this

மத்திய வாஷிங்டன் பகுதியில் பலத்த பாதுகாப்பு

வாஷிங்டன், அமெரிக்கா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வாஷிங்டன் பகுதியில் பலத்த பாதுகாப்பு

வெள்ளை மாளிகை வளாகம் மூடல்; பொதுமக்கள் போக்குவரத்து தடை :

வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் சுற்றித் திரிந்த நபர் மீது ரகசிய சேவை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து, மத்திய வாஷிங்டன் பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும் வெள்ளை மாளிகை வளாகம் உடனடியாக மூடப்பட்டு, தற்காலிக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அப்பகுதிக்கு வர வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கடும் நீர் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு :

பாகிஸ்தானில் நிலவும், கடும் வெப்ப அலை, நீர் தட்டுப்பாடு மற்றும் தொடர் மின்வெட்டு காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உரிய நடவடிக்கைகளை அறிவித்திருந்தாலும், முறையான திட்டமிடல் இல்லாததால் மக்களுக்கு உதவிகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

மேலும், கராச்சியில் உள்ள கே-எலக்ட்ரிக் நிறுவனம், பொருளாதார சுமை என்ற பெயரில் நீண்ட நேர மின்வெட்டை அமல்படுத்துவதால், மின்மோட்டார்கள் இயங்காமல் குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இது அரசின் நிர்வாகத் தோல்வி என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் எல்லைப் பிரச்னை :

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு நேபாள எல்லையோரத்தில், உத்தரகாண்டில் உள்ள லிபுலேக் ((lipulekh)) கணவாயை பயன்படுத்து தொடர்பான விவகாரத்தில், இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் எல்லைப் பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.

நேபாள அரசின் செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான சஸ்மித் பொக்காரெல் ((Sasmit Pokharel)), லிபுலேக் கணவாய் நேபாளத்திற்குச் சொந்தமானது என தெரிவித்திருந்தார், இதற்கு, "இத்தகைய ஒருதலைப்பட்சமான பிராந்திய உரிமை கோரல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என இந்தியா பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில், ராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்க்க, இந்தியாவிற்கு நேபாளம் அழைப்பு விடுத்துள்ளது

"The Odyssey" திரைப்படத்தின் Trailer வெளியீடு :

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ((Christopher Nolan)) இயக்கத்தில், மேட் டாமன் ((Matt Damon)) நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள, "தி ஒடிஸி" ((The Odyssey)) படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கிரேக்க காவியமான ஹோமரின் ((Homer)) "ஒடிஸி" கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படம், ஜூலை 17-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. 'ஓப்பன்ஹெய்மர்' படத்திற்குப் பிறகு நோலன் இயக்கும் 13-வது படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மெட் காலா நிகழ்வில் கவனம் ஈர்த்த இஷா அம்பானி :

2026 மெட் காலா ஃபேஷன் ஷோவில் கௌரவ் குப்தா வடிவமைத்த தூய தங்க ஜரிகை புடவையில், கையில் மாம்பழத்துடன் வலம் வந்து இஷா அம்பானி இந்திய கலைநயத்தை உலக அரங்கில் உயர்த்தி, அனைவர் கவனத்தையும் ஈர்த்தார்.

ஒவ்வொரு ஆண்டும் மெட் காலாவில் இந்தியப் பாரம்பரியத்தை தனது உடை மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டும் இஷா அம்பானி, இந்த ஆண்டு சௌரப் குப்தாவின் கஜரா சிகை அலங்காரத்தில் வைரங்கள் மரகதங்கள் அணிந்து, பாரம்பரியத்தை சமகாலக் கலையுடன் இணைத்தார்.

இஷா அம்பானி கையில் வைத்திருந்த மாம்பழம், சுபோத் குப்தாவின் கை வண்ணத்தில் உருவான உலோகத்தாலான மாம்பழம் என்பது குறிப்பிடதக்கது.

Related Link
டொனால்ட் டிரம்ப்பின்  project freedom என்றால் என்ன ?

டொனால்ட் டிரம்ப்பின் project freedom என்றால் என்ன ?




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாண்புமிகு மாணவன் TO மாண்புமிகு முதல்வர்.!

4
1 hr 8 mins agoshare
விஜய் முதலைமைச்சர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved