news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews மாண்புமிகு மாணவன் TO மாண்புமிகு முதல்வர்.!
tv

Also Watch

tv

Read this

மாண்புமிகு மாணவன் TO மாண்புமிகு முதல்வர்.!

TVK Vijay

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விஜய் முதலைமைச்சர்

ஒவ்வொரு அரசியல் மீட்டிங்கிலும் வரலாறு திரும்புகிறது என விஜய் பேசியது போலவே போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது.!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டது.! மீண்டும் திமுக ஆட்சியை பிடிக்கும் என வெளியான கருத்துக் கணிப்பை தவிடுபொடியாக்கி தமிழக வெற்றிக் கழகம் 100-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றியை தட்டிப் பறித்துள்ளது.!

75 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட திமுக, 50 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட அதிமுக என இரு கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, மூன்றே ஆண்டுகள் ஆன தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.!

தபால் வாக்குகள் எண்ணிக்கையில் ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்த நிலையில், நேரம் ஆக ஆக டிரெண்ட் மாறி தவெக முன்னிலை பெற தொடங்கியது.! ஒரு கட்டத்தில் தவெக திமுகவைமுந்தி முன்னிலை பெற்றது.!

தவெக முன்னிலை எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர, அதிமுக, திமுகவும் 2-ம் இடம், 3-ம் இடத்தில் மாறி மாறி வந்தன.! பிற்பகலுக்கு மேல் 100க்கும் அதிகமான தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றது.! தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.!



1977-ம் ஆண்டு முதன்முதலில் எம்.ஜி.ஆர்.தலைமையில் அதிமுக 200 தொகுதிகளில் போட்டியிட்டு 30 சதவீத வாக்குகளுடன் 130 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் அதிமுக 51 லட்சத்து 94 ஆயிரத்து 876 வாக்குகளைப் பெற்றது.! விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் 2006 தேர்தலில் போட்டியிட்ட போது.

ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், 8.4 சதவீத வாக்குகளை பெற்றது.! ஆனால், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனித்து நின்று ஒரு கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று, 35 சதவீதத்தை எட்டி தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.!

விஜய் அடுத்த எம்.ஜி.ஆரா? அடுத்த விஜயகாந்தா? என எழுப்பப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, நான் தான் முதல் விஜய் என வரலாற்றை எழுதியிருக்கிறார் விஜய்.! தமிழ்நாடு அரசியலில் இது வரை யாருமே பார்க்காத தேர்தலாக இருந்த 2026 தேர்தலில், யாருமே பார்க்காத முடிவுகளும் வந்திருக்கிறது என்பது தான் ஹைலைட்.!

அறிமுகமே இல்லாத பின்புலம் இல்லாத பணம் பலம் இல்லாத தவெக வேட்பாளர்கள், திமுக, அதிமுகவில் பெருந் தலைகளாக இருந்தவர்களை, அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்களை வீழ்த்தி வெற்றியை கைப்பற்றியிருப்பது கவனிக்க வைத்துள்ளது.!

அதுமட்டுமல்லாமல், தேர்தல்களத்தில் நின்ற கட்சிகளில் விஜய் தான் குறைந்த அளவில் பிரச்சாரம் செய்திருந்தார்.! மற்ற கட்சியினர் தொகுதி தொகுதியாக சென்ற அளவுக்கு விஜய் பிரச்சாரம் செல்லவில்லை.!

இதுவரை அரசியலில் இருந்த வழக்கமான ஸ்டீரியோடைப் அனைத்தையும் சுக்குநூறாக உடைத்தெறிந்து வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறார் விஜய்.! விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மட்டும் கண்ணை மூடிக் கொண்டு விசில் சின்னத்திற்கு வாக்குகளை குவித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.!

இதுவரை திராவிட கட்சிகளாக அதிமுகவும், திமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று வந்த நிலையில், இந்த தேர்தலில் மாற்றம் தேவை என்ற பெரும்பான்மை மக்களின் குரல் விஜய்யின் தவெகவுக்கு சாதகமாக அமைந்து சரித்திரம் படைக்க வைத்திருக்கிறது.!

இத்தனை நாட்களாக விமர்சனங்களுக்கும், கேலிக்கும் உள்ளாக்கப்பட்ட விஜய்யின் அரசியல் எண்ட்ரீ, தற்போது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய விஷயமாக மாறியுள்ளது.! நடிகர்கள் நாடாளுவது எம்.ஜி.ஆருடன் முடிந்து விட்டது என்ற விமர்சனத்தை உடைத்து 50 ஆண்டுகளுக்கு பிறகு திரைத்துறையில் இருந்து வந்து ஆட்சியை தன்வசமாக்கியுள்ளார் விஜய்.!

வெற்றியை அடையாளமாக வைத்து கட்சி தொடங்கிய விஜய், முதல் தேர்தலிலேயே வெற்றியை வசமாக்கியிருக்கிறார்.!

Related Link
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாண்புமிகு மாணவன் TO மாண்புமிகு முதல்வர்.!

4
1 hr 36 mins agoshare
விஜய் முதலைமைச்சர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved