news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அசாம் மாநிலத்தில் 3ஆவது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக
tv

Also Watch

tv

Read this

அசாம் மாநிலத்தில் 3ஆவது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக

102 இடங்களில் அமோக வெற்றி

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அசாம் மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக

அசாம் மாநிலத்தில் அமோக வெற்றிபெற்ற பாஜக, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது.

102 இடங்களில் அமோக வெற்றி
மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக மட்டும் 82 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மேலும், அதன் கூட்டணி கட்சிகளான போடோலாந்து மக்கள் முன்னணி, அசாம் கண பரிஷித் ஆகிய கட்சிகள் தலா 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. தவிர, காங்கிரஸ் கட்சி 19 இடங்களிலும், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, ரைஜோர் தளம் ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

பாஜக ஹாட்ரிக் வெற்றி
அ​சாம் மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான கூட்​டணி ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்​தது. ஹிமந்த பிஸ்வா சர்மா 2ஆவது முறை​யாக முதல்​வ​ராக பொறுப்​பேற்க உள்ளார்.
அசாம் மாநிலத்தில், 126 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. 2016ஆம் ஆண்டு பாஜக முதல் முறை​யாக ஆட்​சி​யைப் பிடித்​தது. அப்​போது சர்​வானந்த சோனோ​வால் முதல்​வ​ர் ஆனார். 2021ஆம் ஆண்டில் நடை​பெற்ற தேர்​தலில் பாஜக 2ஆவது முறையாக ஆட்​சி​யைப் பிடித்​த போது, ஹிமந்த பிஸ்வா சர்மா முதல்​வ​ரா​னார்.

ஒரே கட்டமாக தேர்தல்
கடந்த ஏப்​ரல் 9ஆம் தேதி அசாமில் ஒரே கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற்​றது. இதில் ஆளும் பாஜக, அசாம் கனபரிஷத் மற்​றும் போடோ மக்​கள் முன்​னணி ஆகிய கட்சிகள் அடங்​கிய தேசிய ஜனநாயகக் கூட்​டணி - என்​டிஏ போட்​டி​யிட்​டது. காங்​கிரஸ் தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் ராய்​ஜோர் தளம், ஏஜெபி, சிபிஐ-எம், ஏபிஹெச்​எல்சி மற்​றும் சிபிஐ-எம்​எல் ஆகிய கட்​சிகள் போட்டியிட்டன. இதுத​விர அனைத்து இந்​திய ஜனநாயக முன்​னணியான ஏஐ​யுடிஎப் தனி​யாக போட்​டி​யிட்​டது.

ஹிமந்த பிஸ்வா சர்மா முதல்வர்
அசாமில் ஆட்​சி​யை பிடிக்க 64 இடங்​கள் தேவை. ஆளும் பாஜக தலை​மையி​லான என்​டிஏ கூட்​டணி 102 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. இதில் பாஜக 82, போடோலாந்து மக்​கள் முன்​னணி 10, அசாம் கனபரிஷத் 10 இடங்​களில் வெற்றி பெற்​றது. இந்த ​கூட்​டணி தொடர்ந்து 3ஆவது முறை​யாக ஹாட்​ரிக் வெற்றி பெற்​றுள்ளது.

ஹிமந்த பிஸ்வா சர்மா 2ஆவது முறை​யாக முதல்​வ​ராக பொறுப்​பேற்​பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்​கிரஸ் தலை​மையி​லான எதிர்க்​கட்​சிகளின் கூட்​டணி 21 இடங்​களி​லும் ஏஐயுடிஎப் 2 இடங்​களி​லும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி ஒரு இடத்​தி​லும் வெற்றி பெற்றது.

அசாமில் ஹாட்​ரிக் வெற்றி பெற்​றதையடுத்​து, மாநிலம் முழு​வதும் பாஜகவினர் வெற்​றி்க் கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

Related Link
கேரளத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி

கேரளத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டொனால்ட் டிரம்ப்பின் project freedom என்றால் என்ன ?

2
27 mins agoshare
டிரம்ப்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved