Also Watch
Read this
தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவளிப்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.
முயற்சியில் வெற்றி
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது;
நடந்து முடிந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அதிமுக - பாஜக தலைமையிலான சங்பரிவார் அரசியலை வீழ்த்தியுள்ளது. அந்த வகையில் நாங்கள் முன்னெடுத்த முயற்சி வெற்றி பெற்றதாக எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். இதற்காக மக்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம்.

முடிவு எடுக்கவில்லை
இடதுசாரிகளுடன் இணைந்து நாங்கள் அரசியல் களத்தில் பயணித்து வருகிறோம். எதிர்காலத்திலும் முக்கிய அரசியல் முடிவுகளை இணைந்தே எடுப்போம். தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் நாங்கள் சிந்திக்கவில்லை, முடிவெடுக்கவில்லை. அரசியலில் அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஊகமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில்...
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள
காங்கிரஸ் 5
விசிக 2
சிபிஐ 2
சிபிஎம் 2
ஐயுஎம்எல் 2
தேமுதிக 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved