Also Watch
Read this
By: Manigandan Raja

புதிய அரசு மே 9ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் :
மேற்கு வங்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு பாஜகவின் புதிய அரசு மே 9ஆம் தேதி தாகூரின் பிறந்தநாளில் பதவியேற்க உள்ளதாக மாநில தலைவர் சாமிக் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 293 தொகுதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 206 தொகுதிகளில் வெற்றி பெற்று முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 81 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியை பறிகொடுத்தது.
முறைகேடுகள் நடந்ததாக மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு :

மேற்கு வங்கத்தின் பவானிபூரில் ((bhabanipur))போட்டியிட்டு தோல்வியடைந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு மையத்தில் தங்கள் கட்சி முகவர்கள் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டதாகவும், முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அது தொடர்பான தொலைபேசி உரையாடலை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி பகிர்ந்துள்ளார். அதில் முதல்வர் பதவியிலிருந்து விலகவுள்ள மம்தா, பவானிபூர் தீர்ப்பு திருடப்பட்ட ஒன்று என்றும், தேர்தல் ஆணையத்தின் நெறிமுறையற்ற அசிங்கமான விளையாட்டு என்றும் கூறியுள்ளார்.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள்வதில் நடைமுறைக் குறைபாடுகள் இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்த முடிவை ஆதாரங்களுடன் சட்டரீதியாக எதிர்த்து வழக்குத் தொடரப்படும் என்றும் கூறியுள்ளார்.
சாதாரண முறையில் பிரச்சாரம் செய்து எம்.எல்.ஏவாக வெற்றி :

மேற்கு வங்க தேர்தலில் ஆஸ்கிராம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட வீட்டு வேலை செய்யும் பெண் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அசுகிராம் பகுதியை சேர்ந்த கலிதா மாஜி என்ற பெண் 4 வீடுகளில் வேலை செய்து சம்பாதித்து வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்ட அவர் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து சாதாரண முறையில் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றார்.
குஜராத்தின் உம்ரேத் உட்பட 4 தொகுதிகளில் பாஜக வெற்றி :

குஜராத் உட்பட 5 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக 4 தொகுதிகளை கைப்பற்றியது. குஜராத்தின் உம்ரேத், நாகாலாந்தின் கோரிடாங், திரிபுராவின் தரம்நகர், மகாராஷ்டிராவின் ராகுரி ஆகிய 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் அஜித் பவார் மறைவை அடுத்து நடைபெற்ற இடைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், துணை முதல்வருமான சுனேத்ரா பவார் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கர்நாடகாவில் பாகல்கோட்டை, தாவணகெரே தெற்கு ஆகிய இரு தொகுதிகளிலும், ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
காங். கட்சிக்கு சுய பரிசோதனை தேவை :
"காங்கிரஸ் கட்சிக்கு தீவிர சுய பரிசோதனை தேவை" என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் குஜராத் உட்பட 5 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றாலும், பாஜக 4 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
எனவே, கேரளம் தவிர மற்ற மாநிலங்களில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித் தனியான உத்திகள் தேவை என சசி தரூர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved