அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டன. சீனா மீதான வரியை அதிகபட்சமாக 145 சதவீதம் வரை உயர்த்தி அமெரிக்கா அறிவித்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருள்களுக்கு 125 சதவீத இறக்குமதி வரி விதித்து சீனா அதிரடி காட்டியது. இந்த வர்த்தக மோதலுக்கு தீா்வு காணும் நோக்கில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஸ்விட்சார்லாந்து நாட்டு தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.