Also Watch
Read this
Posted on: Mar 29, 2026 03:15 PM
By: Manigandan Raja

அரசு வேலை என அறிவிப்பு :
நேபாளத்தில் Gen Z போராட்டத்தின் போது உயிரிழந்த 27 மாணவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலை வழங்கப்படும் என அந்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு அறிவித்துள்ளது.
நேபாளத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள பாலேந்திர ஷா, பதவியேற்ற உடன் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த அரசாணைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மாணவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, கல்வி தகுதி அடிப்படையில், நேபாள மின்சார ஆணையத்தில் அரசு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved