news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போலீஸ் பாதுகாப்புடன் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி
tv

Also Watch

tv

Read this

போலீஸ் பாதுகாப்புடன் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி

திருவள்ளூர், திருத்தணி

Posted on: Mar 29, 2026 02:56 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Kalvaai

மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி : 

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி ரோடு முதல் தெருவில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள்
கோரிக்கை விடுத்திருந்தனர்.

நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.3.55 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டதால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் ஒரு வாரத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று உறுதியளித்திருந்தனர். அதன்படி நகராட்சி ஆணையர் கன்னியப்பன், நகராட்சி பணி மேற்பார்வையாளர் நாகராஜ் ஆகியோர் , மற்றும் போலீசார் பாதுகாப்புடன் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கினர்.

இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து ஜெசிபி இயந்திரம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி உரிய அனுமதி பெற்று
மழைநீர் கால்வாய் அமைக்கப்படுவதாகவும், போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் பணிகள் தொடங்கி நடைபெற்றது. குடியிருப்புகளுக்கு பாதிப்பின்றி மழைநீர் கால்வாய் அமைக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

Related Link
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர் கூட்டம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர் கூட்டம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் கைதிகள்

1
2 hrs 46 mins agoshare
BGL Jail








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved