ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக அங்குள்ள தாலிபன் அரசு அறிவித்துள்ளது. செஸ் விளையாட்டு சூதாட்டத்துடன் தொடர்புடையது என்பதாலும் சூதாட்டம் ஆப்கனின் இஸ்லாமிய சட்டத்தின் படி சட்டவிரோதம் என்பதாலும் இந்த தடையை விதிப்பதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது. தாலிபன்களின் விளையாட்டுத் துறை இந்த முடிவை எடுத்து அது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.செஸ் விளையாடுவது ஷரியத் சட்டத்தின் படி தவறானது என தாலிபன் விளையாட்டுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.மத நம்பிக்கையின் படி செஸ் தவறானது என தெரிவித்த அவர். இது தொடர்பான தவறுகள் களையப்படும் வரை ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டு மீதான தடை தொடரும் எனவும் கூறினார்.