Also Watch
Read this
By: Web Team

ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் அடுத்த வாரத்தில் சாத்தியமாகும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் தனது நிர்வாகம் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும், அடுத்த வாரத்தில் அந்த நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவர் தமது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் கல்வி மானியங்களை நிறுத்திய டிரம்ப், வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கும் தடை விதித்தார்.
டிரம்பின் இந்த நடவடிக்கையை நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதையும் படியுங்கள் : மினி பேருந்து சேவை திட்டத்தின் மூலம் ஒரு கோடி மக்கள் பயன்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved