Also Watch
Read this
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி களைகட்டியுள்ள பூ வியாபாரம்.. கனகாம்பரம் பூ கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை
களைகட்டியுள்ள பூ வியாபாரம்
Updated: Sep 06, 2024 01:12 PM
நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காந்தி மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூ வியாபாரம் களைக்கட்டியுள்ளது. மல்லிகை, முல்லை கிலோ 500 ரூபாய்-க்கும், செவ்வந்தி,விச்சிப்பூ கிலோ 120 ரூபாய்க்கும், ரோஜா 250 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா 100 ரூபாய்க்கும், சம்பங்கி 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வரத்து குறைவு மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்களின் விலை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved