Also Watch
Read this
By: Web Team

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் உத்தரவிட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அனைத்து விளம்பரங்களிலும் திட்டத்தின் பதிவு எண், QR கோடு, குழும முகவரி இடம் பெற வேண்டும் என்றும், திட்டப் பகுதியின் முகவரியை திட்ட அனுமதியில் உள்ளது போன்று தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தில் உள்ள வசதிகள் தொடர்பான விவரங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும் என்றும், விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் எழுத்துரு அளவு 12 க்கு குறையாமல் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved