தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க 372 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வுபெற்ற மற்றும் விருப்ப ஓய்வுபெற்ற பணியாளர்கள் 1,279 பேருக்கு பி.எப். உள்ளிட்ட ஓய்வூதிய பலன்களுக்காக 372 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் 3,414 பேருக்கு பி.எப். உள்ளிட்ட ஓய்வூதிய பலன்களை வழங்க ஆயிரத்து 31 கோடியே 31 லட்சம் ரூபாய் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.