தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 2 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் காலி பணியிடங்கள் எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமல், நேரடி நியமன நடைமுறையின் மூலம் நிரப்பப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விற்பனையாளர் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் 33 விற்பனையாளர், 315 கட்டுநர் பணியிடங்கள் மற்றும் விருதுநகரில் 58 விற்பனையாளர், 13 கட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.