Also Watch
Read this
By: Manigandan Raja

பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவை சாடிய பத்ரிநாத் :
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர்களான பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகியோரை ஏலம் எடுக்க அணி நிர்வாகத்துக்கு யோசனை கொடுத்தது யார் என சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரண்டு வீரர்களும் ரன் அடிப்பது நம்பும்படியாக இல்லை என்றும், குத்து மதிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் விமர்சனம் செய்தார். இருவரையும் அதிக விலை கொடுத்தே நிர்வாகம் ஏலத்திற்கு எடுத்துள்ளதாகவும் பத்ரிநாத் கருத்து தெரிவித்தார்.
வைபவ் சூர்யவன்ஷி குறித்து யுவ்ராஜ் சிங் கருத்து :
15 வயது சிறுவன் இப்படி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை நம்பவே முடியவில்லை என ராயஸ்தான் ராயல்ஸ் அணியில் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களே எதிர்கொள்ள திணறும் பந்துவீச்சாளரின் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்தது பிரமிப்பானது எனவும் அவர் புகழாரம் சூட்டினார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பும்ரா வீசிய ஓவரில் ராஜஸ்தான் வீரர் வைபவ் சூரியவன்ஷி இரண்டு சிக்சர்கள் அடித்து பிரம்மிக்க வைத்தார்.
மான்செஸ்டர் அணிக்கான ஒப்பந்தத்தை நீட்டித்த ஹாரி மகுவேர் :
இங்கிலாந்தின் பின்கள வீரர் ஹாரி மகுவேர் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கான ஒப்பந்தத்தை ஓராண்டிற்கு நீட்டித்துள்ளார். லெய்செஸ்டர் அணியில் இருந்து 97 மில்லியன் டாலருக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு மான்செஸ்டர் அணியில் இணைந்த அவர், இந்த வருட சீசனுடன் முடிவடைய இருந்த ஒப்பந்தத்தை மேலும் 12 மாதங்களுக்கு நீட்டித்துள்ளார்.
பயிற்சியில் துல்லியமாக யார்க்கர்கள் வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் :
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் அர்ஜுன் டெண்டுல்கர், வலை பயிற்சியின் போது துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் வீசிய பந்தினை எதிர்கொள்ளமுடியாமல் அனுபவம் மிக்க வீரரான கேப்டன் ரிஷப் பந்த் திணறினார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved