மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய அந்த அணியின் கேப்டன் லாரா வால்வார்த் 169 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 42புள்ளி 3 ஓவர்களில் 194 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 125 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.