டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாற்று விக்கெட் கீப்பராக களமிறங்கி ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை துருவ் ஜூரேல் படைத்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டிற்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து, மாற்று கீப்பராக களமிறங்கிய துருவ் ஜூரேல் தலா 2 கேட்ச்கள் மற்றும் ஸ்டம்பிங் செய்து அசத்தினார்.