Also Watch
Read this
By: Manigandan Raja

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி :
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அந்த அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய மகளிர் அணி திணறி வருகிறது. பெர்த்தில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 323 ரன்கள் குவித்தது.
125 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 2-ம் நாள் ஆட்ட முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved